கல்லூரி மாணவர், பேராசிரியர்கள் சார்பில் காப்பகத்துக்கு அரிசி மூட்டைகள்
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, விவேகானந்த கேந்திரம், கிராம முன்னேற்ற திட்டக் காப்பகங்களில் படிக்கும் குழந்தைகளுக்காகவும் முதியோர்களுக்காகவும் ஒரு கை பிடி அரிசியாக சேகரித்து ஆண்டுதோறும் வழங்கி வருகின்றது.

இந்த ஆண்டும் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் இணைந்து 300 கிலோ அரிசிப்பைகளை அக்காப்பகத்திற்கு வழங்கினார்கள்.. முனைவர் பாலா இறை வணக்கம் பாட, முதல்வர் மூ.சுப்புலெட்சுமி, வேதியியல் துறைத்தலைவர் பா.உமாதேவி, இயற்பியல் துறைத்தலைவர் பெ.சித்ரலேகா, ரா.கவிதாமஞ்சு, அலுவலகக் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ பிரதிநிதிகள் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட விவேகானந்த கேந்திரம் பொறுப்பாளரும் கிராம முன்னேற்றத்திட்ட இணைச்செயலாளருமான பரமகுருவிடம் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்களான மா.சங்கரேஸ்வரி, ச.ஜெயகுரும்பன், ந.அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.







