கோவில்பட்டியில் தென் மண்டல அறிவியல் மாநாடு; 450 இளம் விஞ்ஞானிகள் பங்கேற்பு
பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கும் வகையில் இந்தியா முழுவதும் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்து வருகிறது.
இந்தாண்டு தலைப்பாக நீர்மேலாண்மை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென் மண்டல அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹூமான்ஷு மங்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார்.

மாநாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து 450 இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
, நீர்மேலாண்மை குறித்த 180 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இளம் விஞ்ஞானிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் இருந்து 40 படைப்புகள் மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டன., தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

மாலையில் நடந்த விழாவில் மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு டி.எஸ்.பி. ஜெகநாதன் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் தினகரன், தியாகராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் பாண்டியம்மாள், கோவில்பட்டி பொறுப்பாளர் பிரபு மற்றும் அமலராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் முரளி நன்றி கூறினார்.







