தென்காசியில் அரசு வக்கீல் கொலை: கோவில்பட்டியில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி. தென்காசியில் தனது அலுவலகத்தில் நேற்று இருந்தபோது, மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டியில் வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

வக்கீல்கள் சங்க தலைவர் சங்கர்கணேஷ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் கோபி, துணை தலைவர் சிவனுபாண்டி, துணை செயலாளர் சக்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், பாப்புராஜ், சந்தானம், ஆழ்வார்சாமி சிவக்குமார்,ரவிக்குமார்,கார்த்திக் மாறன்,ராஜேஸ் சந்திரன், கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







