கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற 54 ம் ஆண்டு ஆய்வுப்பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 54 ம் ஆண்டு ஆய்வுப்பொழிவு மன்ற வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார். ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்றச்செயலாளர் நம்சீனிவாசன் வரவேற்றார்.
ஆய்வு பொழிவை உப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார். ஏடறியா தமிழர்கள் தந்த இலக்கியத்தின் விழுமியங்கள் தொடர்: 4 இயல்பாய் மொழிந்த கவித்துவம் என்ற தலைப்பில் நடந்த ஆய்வுப்பொழிவில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி பேசினார்.

தொடர்ந்து, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை முருகசரஸ்வதி, உலக திருக்குறள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெயா ஜனார்த்தனன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், கவிஞர் சிவானந்தம், காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனீஸ்வரன், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.







