ரூ.4000 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.4000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம், ரூ.1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள 30 ஆண்டுக்காலப் பிணையப்பத்திரம் ஏலத்தின் மூலம விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் டிசம்பர் 02, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் நடக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) டிசம்பர் 02, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







