பூங்காவில் நடக்கும் சம்பவங்களை உருவாக்கி எடுக்கப்பட்ட திரைப்படம் 28-ம் தேதி ரிலீஸ்
ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு “பூங்கா” என்றே தலைப்பு வைத்து, வருகிற 28’ம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்
4 இளைஞர்கள் பிரச்சினைகளோடு பூங்காவுக்கு வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சினை தீர்ந்ததா என்பதுதான் கதை.

கதாநாயகனாக கௌசிக் நடித்துள்ளார். கதாநாயகியாக ஆரா நடித்திருக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு -ஆர்.ஹெச்.அசோக், இசை- அகமது விக்கி, எடிட்டிங்- முகன் வேல், கலை- குணசேகர், சண்டை பயிற்சி- எஸ்.ஆர். ஹரி முருகன், நடனம் -சுரேஷ் சித், பிஆர்ஓ- கோவிந்தராஜ். தயாரிப்பு- கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன்







