கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் 95 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்
கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் அடிகளார் தலைமை தாங்கினர். பள்ளி தலைமையாசிரியை அலெகஷ்ஜான் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல துணை ஆட்சியர் பெனடிக் ஆசிர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி கல்வி அலுவலர் மரிய ஜாண்பிரிட்டோ ஆகியோர் விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
விழாவில் ஆதி திராவிடர் நலன் தனி வட்டாட்சியர் ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, சுரேஷ், உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
59 மாணவர்கள்,36 மாணவிகள் என மொத்தம் 95 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
விழா முடிவில் கணித ஆசிரியர் இருதய ராஜா நன்றி கூறினார்.







