போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 31-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி.கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் போலீஸ் கான்ஸ்டபிள் ( TNUSRB PC -2025) தேர்வுக்கு மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (Offline) மாதிரி தேர்வு வருகிற வெள்ளிக்கிழமை 31.10.2025 காலை 10.மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.

இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும். தேர்வு எழுத வருபவர்கள் ஆதார் அட்டை நகல், Passport Size Photo, TNUSRB PC Application First Page, Hall Ticket Xerox ஆகியவற்றை எடுத்து வரவும்.
இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்த போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட Google படிவத்தை 30.10.2025 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/eEvAMToXUaPymPg47
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







