கோவில்பட்டியில் நாளை மின்தடை
கோவில்பட்டியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. பின்னர் அன்று மின்தடை இல்லை என்றும் இன்னொரு நாளில் மின்தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவில்பட்டியில் நாளை (செப்.25) வியாழக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், 110/11KV கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 25.9.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி கோவில்பட்டி டவுன், காந்திநகர், திலகர் நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், இராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர், கதிரேசன்கோவில் ரோடு, சுபா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதி, மாதங்கோவில்,
இளையரசனேந்தல் ரோடு, மூப்பன் பட்டி, VMS நகர்,, புதுக்கிராம்,, வேலாயுதபுரம் வள்ளுவர் நகர், மார்கெட் ரோடு, கடலை காரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







