கோவில்பட்டியில் தேமுதிக 21-ம் ஆண்டு தொடக்கவிழா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கி இன்று 21 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமையில் கேக் வெட்டி கொண்டாப்பட்டது.
தொடர்ந்து, மாநில கேப்டன் மன்ற துணைச்செயலாளர், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம் முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றியப்பகுதிகளில் பூத்முகவர்கள் கூட்டம் நடத்தவும்,அக்டோபர் மாதம் உள்ளம் தேடி இல்லம் நாடி கேப்டன் ரதயாத்திரை நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் வருகை தருவதால் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

ஜனவரி மாதம் 9 ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டிற்க்கு சுவர் விளம்பரம் செய்யவும் மாநாட்டிற்க்கு இளைஞரணி மற்றும் மகளிரணியை வலுப்படுத்தி அதிகளவு கலந்துகொண்டு சிறப்பிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் தங்கச்சாமி , கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் ,மாவட்ட துணைச்செயலாளர் ராஜபாண்டி,பொதுக்குழு உறுப்பினர் முருகன், கோவில்பட்டி நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் புதூர் மணிகண்டன், ஆறுமுகபெருமாள், கோவில்பட்டி கிழக்கு பொன்ராஜ்,கயத்தார் மேற்கு நடராஜன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் மேகலிங்கம், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் லட்சுமணண் திருப்பதி, மாவட்ட சமுக வலைதள அணி சிவமுருகன், கிரிதரன் ,மாவட்ட தொழிற்சங்கம் மீனாட்சி, சுந்தரம்,கணேசமூர்த்தி, மதிமுத்து ,ஆழ்வார் விளாத்திகுளம் பொன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்







