பருத்திக்கு மானியம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை டிசம்பர் இறுதிவரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பருத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்கு மத்திய அரசு மானியம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட பருத்தி விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பருத்தி சாகுபடிக்காக விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன், அகில இந்திய விவசாயிகள் மகா சபை மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன், வேலாயுதம், பிச்சை, பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







