கோவில்பட்டி பள்ளி மாணவர்கள் 2 பேர் மாநில பளு தூக்கும் போட்டிக்கு தேர்வு

முதலமைச்சர் கோப்பைக்கான பளு தூக்கும் போட்டி தூத்துக்குடி மாவட்ட அளவில் தென்காசி விளையாட்டு அரங்கத்தில் கடந்த செப்டம்பர் 8 தேதி நடைபெற்றது இதில் கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
2 பேர் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர் எஸ் .கருப்பசாமி 79 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

மாணவர் டி. மகேந்திரன் 88 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் .
மாணவர்கள் இருவரையும் பள்ளி தாளாளர் எஸ். எம்.அருள் ராஜ் அடிகளார் ,
பள்ளி தலைமை ஆசிரியை
ம. அலெக்ஸ்ஷான், உடற்கல்வி ஆசிரியர் அ.ஆரோக்கிய முத்துராஜ் ஆகியோர் பாராட்டினர்







