கல்லூரி மாணவ, மாணவிகள் 51 பேர் ரத்ததானம்
கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் நிறுவனர் தினத்தை கொண்டாடும் விதமாக கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம், ரத்ததான கழகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

கல்லூரியில் பயிலும் 51 இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள மாணவ மாணவியர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்தனர்.
இம்முகாமில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் .துளசி லெட்சுமி, சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், சுகாதார கண்காணிப்பாளர் கருனாநிதி மற்றும். சேவியர், லேப் டெக்னிசியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாம் ஏற்பாடுகளை கல்லூரி செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மு.சுப்புலெட்சுமி மற்றும் இயக்குனர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதல்படி, கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் கு.மாரியப்பன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர்கள் மு.மாரிசாமி, ஆ.ரேவதி, கி.ரேனுகாதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.







