இடை செவல் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை தாங்கினார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமிதா,சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஆதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.
இதில் சமூகத்தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கபட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

கிராம வள பயிற்றுநர்கள் சுதா, சுகன்யா, முனியராஜலட்சுமி, கெளசல்யா பணித்தளப் பொறுப்பாளர்கள், உள்பட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.
இதே போல் கோவில்பட்டி ஒன்றியம் சத்திரப்பட்டி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகதணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.







