சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்; எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கிய கிறிஸ்தவ பேரவை நிர்வாகிகள் கோரிக்கை
கோவில்பட்டியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ்,துணை தலைவர்கள் மோசஸ்,டேவிட், பொதுசெயலாளர் விஜயன், பொருளாளர் ஜோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்,அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் முதலமைச்சாராக பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் சிறுபான்மை மக்களுக்கு சிறப்பாக தாங்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் ஆதரவுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் வாழும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு தாங்கள் ஒரு பாதுகாப்பு அரணாகவும் குரலாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று தங்களை வேண்டிக்கொள்கிறோம்.

கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் ஸ்தலங்களுக்கும் பிரார்த்தனை கூடங்களுக்கும் நற்செய்தி பணிகளுக்கும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்க தாங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் தங்களது ஆதரவை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகிறோம்.
மேலும், தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக நற்செய்தி பணியில் ஈடுபட்டு இருக்கும் கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் ஊழியர்கள் கன்னி சகோதரிகள் ஆகியோருக்கு அரசியல் சாசனப்படி தக்க பாதுகாப்பு வழங்கவும், வடஇந்திய மாநிலங்களில் பொய்யாக வழக்குகள் பதியப்பட்டு சிறைச்சாலையில் உள்ள நற்செய்தி பணியாளர்களை விடுதலை செய்ய தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தமிழகத்தில்உள்ள கிறிஸ்தவ மேம்பாட்டுக்கான சிறப்பான திட்டங்களை மக்களின் கல்வி, தொழில் முன்னெடுக்கவும், தலித் கிறிஸ்தவ மக்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்கி பட்டியல் இனத்தைச் சார்ந்த மத்திய அரசின் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுகிறோம்.
தங்களின் அரசியல் மற்றும் அரசு பணிகள் சிறந்து விளங்கவும், தங்களின் முயற்சி வெற்றி அடையவும், தங்கள் வெற்றிப் பயணம் தொடரவும் இறைமகன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.







