போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தம்பதியின் மகளை காதலித்த ஐ.டி. ஊழியர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்கள் இருவரும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணன் குடும்பத்தினர் தூத்துக்குடியில் வசித்த போது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் படித்த ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) காதலித்துள்ளார்.

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின்குமார் காதல் விவகாரம், தெரிந்து காதலியின் சகோதரர சுர்ஜித் சரமாரியாக வெட்டிகொலை செய்தார்.
காதல் விவகாரத்தில் நெல்லையில் ஐ.டி. ஊழியர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் சரவணனும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் மறியல்போராட்டத்தில் நேற்று மதியம் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்..இந்த நிலையில் அந்த சாலை வழியாக வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.







