தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பாரதியார் பெயர் சூட்ட வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்

இந்து முன்னணி ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
ஒன்றிய தலைவர் சிபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் சிவலிங்கம், ராகவேந்திரா,வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சங்கர், முத்து, மாரியப்பன், புருஷோத்தமன், இஸ்ரவேல், பாண்டியன், ராஜா, பட்ராஜ், சதீஷ்குமார், வெங்கடேஸ்வரன், லிங்க குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

செயற்குழுவில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
*தூத்துக்குடியில் பிரதமர் திறந்து வைத்த சர்வதேச விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் பெயரை மத்திய அரசு வைக்க வேண்டும்.

* ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பல இடங்களில் ஜெப கூடங்கள் மற்றும் மத பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது இதனை மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







