கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் கபடி, கேரம் போட்டியில் சாதனை
கோவில்பட்டி வட்டார அளவிலான கபடி மற்றும் கேரம் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று தூத்துக்குடி மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்

.அதாவது 14 வயதுக்கு உட்பட்ட கபடி மகளிர் போட்டியில் – முதலிடம், 17 வயதுக்கு உட்பட்ட கபடி மகளிர் போட்டியில் முதலிடம், 14 வயதுக்கு உட்பட்ட கேரம் ஒற்றையர் போட்டியில் முதலிடம் 14 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் கேரம் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்,

போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார்கள்.







