கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில மொழி மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் “லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் வெ.தேவிகா வரவேற்று பேசினார். கணிதவியல் துறைத்தலைவரும் இணைப்பேராசிரியருமான அ.பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். வேதியியல் துறைத் தலைவரும் இணை பேராசிரியருமான பா.உமாதேவி வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்வில் “லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பின்” நோக்கங்கள் குறித்து ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர், இரா.சரவண செல்வக்குமார் விளக்கினார்.
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது. பின்னர்,லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பில் பின்னணியில் செயலாற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.அவர்கள் இந்த அமைப்பில் இணைவது குறித்த தங்களது கருத்துக்களையும் பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கில துறை உதவிப் பேராசிரியர்,அ.காயத்ரி நன்றி கூறினார்.
=







