கோவில்பட்டியில் மாநில ஜூனியர் ஆக்கிபோட்டி தொடக்கம்; முதல் ஆட்டத்தில் 13 கோல்கள் விளாசிய திருப்பூர் அணி

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டியில் இன்று தொடங்கியது.35 மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது,
இப்போட்டியின் தொடக்க விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர் எஸ் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் போட்டியான திருப்பூர்- ராணிப்பேட்டை மாவட்ட அணிகளுக்கு இடையேயான போட்டியை தொடக்கி வைத்தார்.

நாடார் மேல்நிலை பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார். நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ் செயலாளர் ஜெயபாலன் பொருளாளர் சுரேஷ்குமார் தர்மகர்த்தா மாரியப்பன் நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் விஜயகுமார் செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் சாமி ராஜன் வேல்முருகன் ரவி வெங்கடேஷ் தலைமையாசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு விருந்தினரை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி காளிமுத்து பாண்டிராஜா தூத்துக்குடி துறைமுக ஆக்கி பயிற்சியாளர் ராஜா குமார் ஆகியோர் வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர் உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார் கூத்து ராஜன் ராம்குமார் வேல்முருகன் மகேஸ்வரி உமாதேவி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்

முதல் போட்டியில் திருப்பூர் மாவட்ட அணி 13- 0 என்ற கோல் கணக்கில் ராணிப்பேட்டை அணியினரை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது,. மற்றொரு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மாவட்ட அணி 4-1 என்ற கோல் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்ட அணியை வெற்றி பெற்றனர்
விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அணி தலா இரண்டு கோல்கள் போட்டு சமநிலையில் முடிந்தது கோயமுத்தூர் மாவட்ட அணி 5-0 என்ற கோல்கணக்கில் திருவள்ளுவர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது







