கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வர் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகர காங்கிரஸ் 5வது வார்டு கமிட்டி சார்பில் அருண்பாண்டியன் தலைமையில் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலாயுதபுரம் ராஜீவ்காந்தி படிப்பகம் முன்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், மருத்துவ அணி மாவட்ட தலைவர் மருத்துவர் மாறன், ஐஎன்டியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன்,மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜா, முன்னாள் உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 5வது வார்டு தலைவர் பிச்சைகனி மதி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார்,சுப்புராயலு, மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மகேஷ்குமார், சிறுபான்மையினரின் பிரிவு தலைவர் அருள்தாஸ், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், சிவப்பிரகாசம்,முத்துராமலிங்கம், ஜோஷ்வா, சுடலைமணி, மாரியப்பன்,சுரேஷ்பாண்டியன்,மகாபிரபு, தர்மர், பழனிசாமி, மஹேந்திரன், முருகேசன், மூக்கையா, வேல்சாமி, கோபால், சண்முகவேல், கழுகுமலை நகர தலைவர் மரியதங்கராஜ், வைரவராஜ்,பாலகனேஷ், அருண்ராஜ், பொம்மி, கனகா,நல்லமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்







