ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அன்னதானம்
Oplus_16777216
கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 47 வது மாத பொங்கல் பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

அன்னதான நிகழ்ச்சி தொடக்க விழாவில் கழுகுமலை காமினி மோட்டார்ஸ் அண்ட் பைனான்ஸ் உரி மையாளரும் ராகவேந்திரா சேவா அறக்கட்ட ளையின் தலைவருமான ஜெயக்கொடி கலந்து கொண்டு அனைவரை யும் வரவேற்று பேசினார்.
கழுகுமலை காவல் ஆய்வாளர் பத்மாவதி பொங்கல் பிரசாதம் வழங்கினார்.கோவில் செயல் அலுவலர் கார்த் தீஸ்வரன் அன்னதா னத்தை துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார்

நிகழ்ச்சியில் அறக்கட் டளை நிறுவனர் சீனிவாசன், செயலாளர் ஜோதி
ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், நாலாட்டின்புத்தூர் அரசு ஒப்பந்ததாரர் காளிதாஸ் தொழிலதிபர் பெரிய ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்ரமணியன் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சங் கரன்கோவில் வழக்கறி ஞர் அய்யாதுரை பாண்டியன், ஆர். எம் .ஆர். கடலை மில் அதிபர் ரமேஷ், பங்குவர்த்தனை நிபுணர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







