டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கட்டணமில்லா 3-வது மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 5-ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்,பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (Offline) மாதிரி தேர்வுகள் மூன்று தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதல் இரண்டு மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
3 வது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (5.7.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

3-வது மாதிரி தேர்வுக்கு கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும். பு
திதாக தேர்வு எழுத வருபவர்கள் ஆதார் அட்டை நகல், Passport Size Photo, TNPSC Gr-4 Application First Page ஆகியவற்றை எடுத்து வரவும். Hall Ticket வெளியிடப்பட்டிருந்தால் Hall Ticket Xerox எடுத்து வரவும்.

இந்த நேரடி (Offline) மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட Google படிவத்தை 4.7.2025 பிற்பகல் 2 மணிக்குள் பூர்த்தி செய்யவும். .
https://forms.gle/WqiXW95PccLSGKrC9
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.







