கோவில்பட்டி கல்லூரி கருத்தரங்கில் முன்னாள் ஐஜி முத்துசாமி பங்கேற்பு
கோவில்பட்டி இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் கல்வியே அழியாத செல்வம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன், வேளாண்மை துறை முன்னாள் இணை இயக்குனர் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றார்.

தமிழக காவல்துறை முன்னாள் ஐஜி முத்துசாமி கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது.
கற்ற கல்வியை தொடர்ந்து அறிவை மேம்படுத்தி சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.நிறுவனங்களில் படிப்பது மட்டும் கல்வி அல்ல,தொடர்ந்து தான் செய்கின்ற தொழிலை பற்றி மேலும் தெரிந்து கொள்வதும் தான் கல்வி.

ஒருவர் கல்வி கற்றால் ஏழு தலைமுறைக்கும் உறுதுணையாக இருக்கும்,எத்தனை தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தற்கு ஈடாகாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் கல்லூரி ஆசிரியை பூபதி நன்றி கூறினார்.







