டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 கட்டணமில்லா 2-வது மாதிரி தேர்வு தூத்துக்குடியில் 28ம் தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது.

முதலாவது மாதிரி தேர்வு கடந்த 21.6.25 அன்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 2வது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (28.6.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.
2-வது மாதிரி தேர்வுக்கு கூடுதல் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு Question Paper and OMR Sheet வழங்கப்படும்.

புதிதாக தேர்வு எழுத வருபவர்கள் ஆதார் அட்டை நகல், Passport Size Photo, TNPSC Gr-4 Application First Page ஆகியவற்றை எடுத்து வரவும். இந்த நேரடி மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் போட்டித் தேர்வர்கள் கீழ்க்கண்ட Google படிவத்தை 27.6.2025 பிற்பகல் 2 மணிக்குள் பூர்த்தி செய்யவும். .
https://forms.gle/WqiXW95PccLSGKrC9
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2003251 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
3 வது மாதிரி தேர்வு, 5.7.2025 அன்று நடக்கிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.







