மரணம் அடைந்த நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் உடல் தகனம்
Oplus_16777216

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் தொழிலதிபருமான ஏ.பி.கே. பழனிச்செல்வம் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் கோவில்பட்டி செக்கடி தெருவில் அமைந் துள்ள அவரது இல்லத்திற்கு
கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு இன்று காலை வைக்கப்பட்டது.
கோவில்பட்டி நாடார் உற வின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளிஅம்மன் கோவில் நிர்வாக குழு, மீனாட்சியம்மன் சமேத சுந் தரேஸ்வரர் கோவில் நிர்வாக குழு, நாடார் நடுநிலைப்பள்ளி,ஐசிஎம். நடுநிலைப் பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, கோவில் பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ராஜ் இன்டர்நேஷனல் அகாடமி (சிபிஎஸ்சி), எஸ்.எஸ். டி.எம். கலை மற்றும் அறி வியல் கல்லூரி நிர்வாக குழு, ஆசிரியர், ஆசிரியைகள், மற்றும் பொதுக்குழு உறுப் பினர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் எனத் திரளானோர் அவரது உடலுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு மலர் மாலை வைத்து பழனிச்செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நகராட்சி தலைவர் கருணாநிதி துணைத் தலைவர் ஆர் எஸ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்
மாலை 3 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஏபிகே பழனி செல்வம் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
மெயின் ரோடு, இளையரசனேந்தல் ரோடு வழியாக நடராஜ நகரில் உள்ள நாடார் உறவின்முறைக்கு சொந்தமான இடுகாட்டை அடைந்தது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.







