அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் 4-ந்தேதி தொடங்குகிறது; கோவில்பட்டி மீனாட்சி கோவிலில் 108 இளநீர் அபிஷேகம் ஏற்பாடு
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வரும் 4 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது.
அறிவியல் ரீதியாக பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எனினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேஸ்வரர் சுவாமி ஆலயத்திலே (04/5/2025) ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் ஆரம்பத்தை முன்னிட்டு இரவு 7.35 மணி அளவில் சுவாமி அம்பாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.
அபிஷேகத்திற்கு இளநீர் கொண்டு வரும் பக்தர்கள் மாலை 7.15 மணிக்குள் ஆலயத்திற்கு இளநீர் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







