ரஜினி மன்றம் சார்பில் அன்னதானம்
தமிழ் புத்தாண்டு மற்றும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உழைப்பாளி ரஜினி மன்றம் சார்பில் மெயின் ரோடு பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா தலைமை தாங்கினார்.உழைப்பாளி ரஜினி மன்றம் தலைவர் இந்துராஜ்,செயலாளர் கதிரேசன்,பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்கள் குமாராசாமி,முத்துமாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மன்ற உறுப்பினர்கள் வைரமுத்து,கணேசன்,ஐயப்பன்,ஆவுடையப்பன்,மணி,கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர இணைச்செயலாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்









