நெல் பயிருக்கு துத்தநாக சத்து தேவையா ?
நெல் பயிரின் விளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பேரூட்ட சத்துகளும் நுண்ணூட்ட சத்துகளும் தான்.அந்த வகையில் நுண்ணூட்ட சத்துகளில் நெல்லுக்கு மிகவும் தேவையான சத்து துத்தநாக சத்து யாகும் .
இதனை நாம் நெல் பயிருக்கு துத்தநாக சல்பேட் ( ZINC SULPHATE) என்ற வடிவிலும் துத்தநாக பாக்டீரியா வடிவிலும் நிலத்திலும் .இலைவழி தெளிப்பாக வும் நெல் பயிருக்கு கொடுத்து வருகிறோம்.
நெல்லில் துத்தநாகத்தின் பங்கு
1) நெற்பயிரில் பச்சையம் தொடங்கி பல்வேறு உயிர்வேதி வினைகளில் துத்தநாகம் உதவுகின்றன .
2) துத்தநாகம் பயிர்களின் செல்களில் உள்ள பல்வேறு நொதிகளிலும் , உயிரணுக்கள்உள்ள ரைபோ நீயூக்களிக் அமிலம் தயாரிக்கவும் உதவுகின்றன.
3) பயிரின் வளர்ச்சி கட்டுப்படுத்தும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கும் , பயிர்களில் எற்படும் வளர்சிதை மாற்றங்களுக்கும் துத்தநாக சத்து தேவைப்படுகின்றன.
மண்ணில் துத்தநாக சத்து குறைப்பாடுகள் எதனால் உண்டாகிறது ?
1) ஓரே நிலத்தில் தொடர்ச்சியாக நெல்சாகுபடி செய்வதாலும் இந்த துத்தநாக பாதிப்பு உண்டாகும்.
2) எப்போதும் அதிகப்படியான தண்ணீர் வயலில் தேங்கியுள்ள நிலையிலும் குறைபாடுகள் உண்டாகும்.
3) மண்ணில் PH அளவு 7க்கு மேல் இருந்தாலும்கூட ( களர் ) துத்தநாக
குறைபாடு எற்படலாம்.
4) பாசனநீரில் அதிக அளவாக பைகார்பனேட் உப்பின் அளவு அதிகமாக இருந்தாலும்கூட துத்தநாக குறைபாடு மண்ணில் எற்படும்
5) அதிக படியான மணிசத்து நிலத்தில் இடுவதாலும் குறைபாடு எற்படும்.
6) தழைசத்தாக யூரியாவை தொடர்ந்து இடுவதாலும் மண்ணில் பற்றாக்குறையாக துத்தநாக சத்து மாறலாம்.
7)களர் நிலங்கள் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள நிலங்களிலும் துத்தநாக பற்றாக்குறை வர வாய்ப்புள்ளது.
நெல்பயிரில் பற்றாக்குறையின் அறிகுறிகள் ?
1) நெல் நடவு செய்த 2-3வாரங்களில் தென்படும்.
2)பாதிக்கப்பட்ட நெற் பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிற கோடுகள் தோன்றும்.பின்னர் பழுப்புநிற கோடுகளாக மாறி பயிர் வளர்ச்சி குன்றி விடும்.சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலை களில் காணப்படும்வளர்ச்சி சீராக இருக்காது.நெல் மணி பிடித்தல் காலதாமதமாகும்.
துத்தநாக சத்தை எப்படி நெல் பயிருக்கு வழங்குவது ?
1) கடைசி உழவில் ஏக்கருக்கு 10கிலோ ஜிங்க் சல்பேட் 20கிலோ மணலுடன் கலந்து மேலோட்டமாக இட வேண்டும் ( நடுவதற்கு முன்னதாக இடவேண்டும்)
2) MICRO NUTRIENTS MIXTURE ஏக்கருக்கு 5கிலோ + 20 கிலோ மணலுடன் தூவிட வேண்டும்.இதில் ஜிங்க் உள்ளிட்ட மற்ற நுண்ணூட்ட சத்துகள் இருக்கும்.
3) நடவு வயலில் பயிரில் துத்தநாக பற்றாக்குறை தென்பாட்டால் அதற்கு 0.5% ( 5கிராம் /1லிட்டர் தண்ணீரில்) துத்தநாக சல்பேட்யுடன் 1% ( 10கிராம் யூரியா /1 லிட்டர் தண்ணிய என்ற அளவில் இந்த கலவை கரைசலை தெளிக்க லாம்.இலைவழியாக ( FOLIAR SPRAY) செய்யலாம் .
4) துத்தநாக திட பாக்டீரியா 800கிராம் அல்லது திரவ துத்தநாக பாக்டீரியா ( LIQUID FORM) 200மிலி யை 10கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நெல்வயலில் தூவி விடவேண்டும்.இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள துத்தநாகத்தை கிரகித்து பயிர்களுக்கு கொடுக்க உதவும்..
மானியத்தில் ஜிங்க் சல்பேட் விவசாயிகளுக்கு உண்டா?
தற்போது நெல் சாகுபடி அதிகமாக உள்ள வட்டாரத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மூலமாக 50% மானியத்தில் இந்த நுண்ணூட்ட உரம் வழங்க பட்டு வருகிறது.உரிய ஆவணங்களுடன் சென்று வாங்கி பயன்படுத்திட வும்.
நெல்பயிரின் வளர்ச்சியில் விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு யூரியா டி.ஏபி இடுவதில் ஆர்வம் நுண்ணூட்ட சத்துகளான துத்தநாக சத்தையும் பொட்டாஷ் உரத்தையும் இடுவதில் ஆர்வமாக இல்லை.இந்த இரண்டுசத்துகளும் விளைச்சலை தீர்மானிக்கின்றன என்பதை மறந்து விடுகிறார்கள்.இனிமேலாவது சமச்சீராக உரம் இட்டு விளைச்சலை அதிகரிக்க செய்ய வேண்டும்.
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை







