கோவில்பட்டி திருமால்நகர் வீரலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி திருமால் நகர் ஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருடாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி காலை 7 மணிக்கு திவ்ய ஆராதனம் கோஷ்டியுடன் தொடங்கியது. அன்று மாலை \81 கலச ஆராதனம், மூலவர் ஸ்ரீஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு 81 கலச திருமஞ்சனம், சிறப்பு திருவாராதனம், சாற்றுமறை கோஷ்டி ஆகியவை நடந்தது..
மறுநாள் காலை மற்றும் மாலையில் ஸ்ரீலட்சுமி = நரசிம்ம யாகம், வேத திவ்யப்ரபந்த பாராயணம், பூர்ணாகுதி சாற்றுமுறை கோஷ்டி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஸ்ரீலட்சமி நரசிம்ம யாகம், வேத, திவ்யப்ரபந்த பாராயணம், 11 மணிக்கு பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்ப புறப்பாடு ஆகியவை நடந்தது.
பகல் 11.30 மணிக்கு ஐஸ்வர்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம், திருவாராதனம், தீபாராதனை, வேத திவ்யப்ரந்த சாற்றுமுறை, ஸ்வஸ்தி, கோஷ்டி தீர்த்தம் நடந்தது. மாலையில் 5 கருட சேவை நடந்தது.
ப்ரஹ்லாதவரதன், யக்ஞமூர்த்தி, ராமர், பாண்டுரங்கன், ராஜகோபாலன் ஆகிய 5 எம்பெருமான்களும், பகவத் ராமானுஜருக்கு கருட வாகனத்தில் சேவை சாதித்து திருவீதி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







