கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் இளம் மழலையர் பட்டமளிப்பு விழா
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இளம் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் வக்கீல் செல்வம் முன்னிலை வகித்தார்., பொருளாளர் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பொன்ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பிரபு ஆண்டு அறிக்கை வாசித்தார்
நாடார் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் வேல்முருகன் மற்றும் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் துரை.பத்மநாபன் கலந்து கொண்டு பேசினார், எடுத்துக்கூறினார். மாணவி மகாஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பட்டங்களும் வழங்கப்பட்டன. குழந்தைகளின் நடனம்,பேச்சு,பாடல், மாறுவேடம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்கள் கதிர் செல்வன், ஆத்விக் மற்றும் சொர்ணமலர் விழாவை தொகுத்து வழங்கினர்.
.மாணவர்கள் கவிப்பிரியா மற்றும் வர்னேஷ்வரன் அனைவரையும் வரவேற்றனர். மாணவி தீபிகா நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஒருங்கினைப்பாளர்கள் அன்னலட்சுமி, ஐஸ்வர்யம், பிரியதர்ஷினி, முருகேஸ்வரி மற்றும் ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.







