திண்டுக்கல்லில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன் சிலையுடன் கோவில்
திண்டுக்கல் பழனி சாலை முருகபவனம் இந்திராநகரில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன்=, முத்துமாரியம்மன் , கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சதாசிவம் குருக்கள் தலைமையில் 16 யாக குண்டங்கள் அமைத்து 20 சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் கிராம சாந்தி, ருத்ர ஜெபம், வேத பாராயணம், நடைபெற்றது.
தொடர்ந்து கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, உயிர் ஊட்டுதல் வைபவம் நடைபெற்றது. கனி, மூலிகை வேள்வி, நிறையவி அளித்து புனித நீர் குட யாத்திரை நடைபெற்றது.
பின்னர் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன், முத்து மாரியம்மன் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர்கள் வைஷ்ணவி காளியம்மன், முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான கன்னி மூலை கணபதி, முருகன், பைரவர், நவகிரகங்களுக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
.







