வீட்டின் பூஜை அறையில் புகுந்த பாம்பு; தீயணைப்பு படையினர் பிடித்தனர்
கோவில்பட்டி அருகே பாஞ்சாலங் குறிச்சி கோட்டை தெருவில் சரவணக்குமார் என்பவரது வீட்டு பூஜை அறைக்குள் ஒரு பாம்பு பகுந்து விட்டதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர், இதன்பேரில்; ஒட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் பூஜை அறைக்குள் தேடி பார்த்தனர். கண்களில் தென்படவில்லை. நீண்ட நேரம் கழித்து ஒரு வழியாக அந்த பாம்பு பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர், பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்,
5 அடி நீளம் இருந்த அந்த பாம்பு சாரைப்பாம்பு ஆகும். அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.
சாரைப்பாம்பு மிக வேகமாக நகரக்கூடியது; சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. பகலிரவு வேட்டையாடும், வேகமாக மரமேறும்.. வறண்ட பிரதேசம், நீர் நிறைந்த இடம், மலைப்பாங்கான இடம், திறந்தவெளி மற்றும் காடு. கடற்கரையோரம் வாழக்கூடியது,
எலி வலைகளும், கரையான் புற்றுகளும் சாரைப்பாம்பின் விருப்பமான தங்குமிடங்கள். இதன் உணவு தவளை, தேரை, ஓணான், பறவைகள், எலி, வவ்வால், பாம்புகள் போன்றவை ஆகும்.







