கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கக்கோரி தேசிய விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி நகரம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது, ஒன்றுப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் துணை மாவட்ட தலைநகரம் ஆக இருந்த கோவில்பட்டி பகுதியில் பல்வேறு தேச தலைவர்கள் உருவாகி விடுதலை போரில் மிகப் பெரிய பங்களிப்பு செய்து உள்ளனர்.
மாவட்டத்துக்கு முழு தகுதி பெற்ற ஊராக கோவில்பட்டி விளங்கி வருவதால் கோவில்பட்டி,கயத்தாறு, எட்டயபுரம்,ஓட்டப்பிடாரத்தின் வடக்கு பகுதி,விளாத்திகுளம்,சாத்தூர்,வெம்பகோட்டை,திருவேங்கடம் ஆகிய பகுதிகளை இணைத்து கோவில்பட்டி மாவட்டம் உருவாக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி, இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புகுழு தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முற்றுகை போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுரேஷ்குமார்,மாநில ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, மாவட்ட இயற்கை விவசாய பிரிவு தலைவர் கருப்பசாமி,மாநில துணை தலைவர் ஞnனமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், ஊடக இணைய தள பொறுப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது, மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் பெய்த கனமழையால் பாசி, உளுந்து, மக்காசோளம், பருத்தி ஆகிய பயிர்கள் வெள்ளத்தால் மற்றும் மழை நீர் தேங்கியதால் மிகப் பெரிய பாதிப்பு அடைந்து உள்ளதால் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிவுக்கு கோவில்பட்டி பயணியர் விடுதியில் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
,2024-2025 ஆம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.’
,கோவில்பட்டி யூனியன் உடன் இதுவரை இணைக்காமல் தாமதம் செய்து வரும் இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துகளை உடனடியாக கோவில்பட்டி யூனியனுடன் சேர்க்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.







