பள்ளி மாணவர்களுடன் காலை உணவு அருந்திய ஆட்சியர் இளம்பகவத்
![பள்ளி மாணவர்களுடன் காலை உணவு அருந்திய ஆட்சியர் இளம்பகவத்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/c59714ff-22cd-4b38-b083-fa04138a4a2e-e1734606448909-850x560.jpeg)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் இளம்பகவத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
குளத்தூர் ஊராட்சி, இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார்.
பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் இளம்பகவத் காலை உணவு அருந்தினார்..
அங்கு மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தமாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கேட்டறிந்தார்.
முன்னதாக குளத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்ட ஆட்சியர், தண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தார்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)