• June 8, 2025

மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கைலாஷ் கெலாட்: ஆம் ஆத்மி அதிர்ச்சி

 மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கைலாஷ் கெலாட்: ஆம் ஆத்மி அதிர்ச்சி

டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி தரும் வகையில் முக்கிய மந்திரிகளில் ஒருவரான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கைலாஷ் கெலாட் உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன்வசம் வைத்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட காலமாக இருந்த அவரின் இந்த முடிவு அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

கைலாஷ் கெலாட்., ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆம் ஆத்மி மிக மோசமான உட்கட்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது. கட்சியின் மக்கள் நலன் கொள்கையை அரசியல் இலக்குகள் வென்று விட்டன. இதனால் கட்சி முன் வைத்த பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. யமுனை ஆற்றை தூய்மை படுத்துவேன் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி அதற்கு ஒரு சாட்சி. இப்போது யமுனை ஆறு முன்பை விட மிக மோசமாக மாசடைந்துள்ளது.

இதே போல் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. கேஜ்ரிவாலின் பங்களா சர்ச்சை உள்பட பல்வேறு சர்ச்சைகள் மக்கள் மத்தியில் ‘இனியும் ஆம் ஆத்மியை நம்பலாமா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி இப்போதெல்லாம் தனது அரசியல் கொள்கைக்காக சண்டையிடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்களுக்கு அடிப்படை சேவைகளை கூட செய்ய முடியாமல் போகிறது. பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் போட்டி போட்டு கொண்டே இருப்பதில் ஆம் ஆத்மி செலவழித்து கொண்டிருந்தால் டெல்லி உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது என்பதே உண்மை.

நான் எனது அரசியல் பயணத்தை மக்கள் சேவை என்ற இலக்கோடு தொடங்கினேன். அதையே தொடர விரும்புகிறேன். அதனால் இப்போது ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்து கொள்வதை தவிர வேறு வழியே இல்லை என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். அதனால் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். உங்கள் உடல் நலம் சிறக்க, எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.

இவ்வாறு கைலாஷ் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *