குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தி ஜேக்பால் வெற்றி
முன்னாள் உலக ‘ஹெவிவெயிட்’ சாம்பியனான மைக் டைசன் இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தினார். 6 போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். சுமார் 20 ஆண்டுக்கு பின் மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார் மைக் டைசன்.
இந்நிலையில் இன்று (நவம்பர்.16) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், குத்து சண்டை போட்டி நடந்தது. இதில் 58 வயதான மைக் டைசன், 31 வயதான ஜேக்பால் மோதினர். 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார்.
போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் வைரலாகி, உலக அளவில் போட்டிக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற ஜேக்பாலுக்கு இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய் பரிசுப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







