• November 16, 2024

வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: பயணிகள் அதிர்ச்சி

 வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு: பயணிகள் அதிர்ச்சி

இந்திய ரெயில்வேயின் ஒரு மைல் கல்லாக வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரெயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரெயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட சாம்பாரில், வண்டு இறந்து கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் முறையிட்ட நிலையில், அது சீரகம் என கூறியுள்ளனர். ஆனால் அது வண்டுதான் என நிரூபித்ததை தொடர்ந்து, பயணிகளை ஊழியர்கள் சமரசம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் சாப்பாட்டில் வண்டு கிடந்தது குறித்து பயணிகள் ஆதங்கத்தோடு பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வந்தே பாரத் ரெயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், அதில் கொடுக்கப்படும் உணவு பயனுள்ளதாக இல்லை. கிட்டத்தட்ட 200 ரூபாய் உணவுக்காக மட்டும் கட்டணத்தில் வசூலிக்கின்றனர். தரமான உணவை வழங்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிக கட்டணம் என்றாலும் விரைவான சேவை என்பதால் வந்தே பாரத் ரயில் சேவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உணவில் வண்டு கிடந்ததாக எழுந்துள்ள புகார் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *