• October 23, 2026

கேப்டனுடன் சண்டையிட்டு வெளியேறிய அல்சாரி ஜோசப்: 10 வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்

 கேப்டனுடன் சண்டையிட்டு வெளியேறிய அல்சாரி ஜோசப்: 10 வீரர்களுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் நவம்பர் 6 நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணிஅசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது, விக்கெட் மெய்டன் ஓவர் வீசியபோதும் கேப்டனுடன் சண்டையிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப்.

இன்னிங்ஸின் 4-வது ஓவரை அல்சாரி ஜோசப் வீசினார். அந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் வில் ஜாக்ஸ் அவுட்டான நிலையில் புதிய வீரராக ஜோர்டன் காக்ஸ் களத்தில் பேட்டிங் செய்தார். புதிய வீரர் என்பதால் அவருக்காக 2 எக்ஸ்ட்ரா ஸ்லிப் பீல்டர்களை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் நிறுத்தினார். இதை எதிர்ப்பார்க்காத அல்சாரி ஜோசப் பீல்ட் செட்டை மாற்றுமாறு கோரிக்கை வைத்தார், ஆனால் அல்சாரியின் கோரிக்கையை ஷாய் ஹோப் நிராகரிக்க அல்சாரி தொடர்ந்து பந்துவீசினார்.

பீல் செட் மாற்றத்தில் மகிழ்ச்சியடையாத அல்சாரி ஜோசப் கோபத்தில் 148.2 கிமீ வேகத்தில் பவுன்சரை வீசி ஜோர்டன் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசிய அல்சாரி ஜோசப், தன்னுடைய கேப்டனின் அணுகுமுறையால் காரசார விவாதம் நடத்திவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிவிட்டு ஒரு ஓவர் வரை கிரவுண்டுக்குள் வராத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களோடு மட்டுமே பீல்டிங் செய்தது.

பின்னர் கிரவுண்டுக்குள் வந்த அல்சாரி ஜோசப் அணியுடன் பீல்டிங்கில் பங்கேற்றார். கிரிக்கெட் வரலாற்றில் இப்படியான நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் இந்த சம்பவம் வைரலாகி வரும் நிலையில், பந்துவீச்சாளரின் கோரிக்கையை கேப்டன் ஏற்கவேண்டும் என்றாலும், கேப்டனின் வியூகத்தையும் பவுலர் மதிக்க வேண்டும் என பல நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *