• June 8, 2025

”நீங்களும் உங்கள் பாதுகாப்புமே எனக்கு முக்கியம்”: தவெக தலைவர் விஜய்

 ”நீங்களும் உங்கள் பாதுகாப்புமே எனக்கு முக்கியம்”: தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அவர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இருசக்கர வாகன பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரை போல சில விசயங்களைத் திரும்ப திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டு பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகன பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்பு கருதியே இதை சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டு பணிக்கானக் கழக தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். என தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *