• June 8, 2025

ராணுவ வீரர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்ட அமரன்

 ராணுவ வீரர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்ட அமரன்

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவ பின்னணி என ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் சிறப்பு காட்சி டில்லியில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த திரையிடலில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் பங்கேற்றார்கள். தீபாவளிக்கு இந்தப்படம் பெரிய வெற்றியை பெறுமென் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *