• June 8, 2025

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் வருகின்ற 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள் கூட்டமாக காணப்படுகின்றன. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய,மாநில அரசுள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி அரசு பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதி துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு நகலானது அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5000, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500, தீபாவளி போனசாக அறிவித்து முதல் அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.1000 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *