• June 8, 2025

ரிலிஸ் ஆகி 9 வருடங்களான ‘நானும் ரவுடி தான்’: நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

 ரிலிஸ் ஆகி 9 வருடங்களான ‘நானும் ரவுடி தான்’: நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “நானும் ரவுடிதான்” படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். இப்படத்தின் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக விக்னேஷ் சிவன் மாறியுள்ளார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

‘நானும் ரவுடி தான்’ அக்டோபர் 2015 அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப்படம் அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் விதமாக நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘எனது வாழ்க்கையை ஆசிர்வதிக்கவும் மாற்றவும் வந்த படம் இது. 9 வருடங்களுக்கு முன்பு நானும் ரவுடி தான் ரிலீஸ் ஆனது. மக்களிடம் இருந்து புதிய அன்பை கொடுத்த படம். எப்போதும் மறக்க மாட்டேன். நடிகையாக புதிய பாடங்கள், அனுபவங்கள், புதிய நினைவுகள், அத்துடன் புதிய உறவு. எனக்கு இந்த படத்தையும், என்னவனையும் கொடுத்த விக்னேஷுக்கு நன்றி. சிறப்பு வாய்ந்த படமென எப்போதும் தொடர்ந்து நினைவிருக்கம்படியான நினைவுகளுடன் நான் சேகரித்து வைத்திருந்த சில புகைப்படங்களை பகிர்க்கிறேன்’ என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *