• June 8, 2025

மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலிஸ்: தேதி அறிவிப்பு

 மெய்யழகன் படத்தின் ஓடிடி ரிலிஸ்: தேதி அறிவிப்பு

’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ‘மெய்யழகன்’. இது கார்த்தியின் 27-வது படமாகும். இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இநநிலையில், ‘மெய்யழகன்’ திரைப்படம் வருகிற 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு சில விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டது.

தற்போது ஓடிடி தளத்தில் கட் செய்யப்படாத காட்சிகளுடன் முழுமையாக படம் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 25-ந் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது 2 நாட்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *