• June 8, 2025

விஜய்யின் ‘தி கோட்’ படத்தை பாராட்டிய ரஜினி: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

 விஜய்யின் ‘தி கோட்’ படத்தை பாராட்டிய ரஜினி: வெங்கட் பிரபு நெகிழ்ச்சி

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த்,பிரபு தேவா,அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.455 கோடி வரை வசூலை குவித்தது. கடந்த 3-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னை தொடர்புகொண்டு பாராட்டியதாக படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “போன் செய்து கோட் படத்தை அன்புடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா. முழு மனதார பாராட்டியதற்காக மீண்டும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *