• June 8, 2025

10,11,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு

 10,11,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான 10,11,12-ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, செய்முறை தேர்வானது 12-ம் வகுப்பிற்கு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பிற்கு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பிற்கு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

பொது தேர்வானது 12-ம் வகுப்பிற்கு அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும். மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி 11-ம் வகுப்பிற்கு நடைபெறும். மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10-ம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் நடைபெறும்.

12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும். மே 19-ந்தேதி 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *