• November 1, 2024

பெருமாள் கோவில்களில் துளசியின் முக்கியத்துவம்- அற்புத சக்தி

 பெருமாள் கோவில்களில் துளசியின் முக்கியத்துவம்- அற்புத சக்தி

மகா விஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும்.பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள்மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச் சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

துளசியின் வேறு பெயர்கள் பிருந்தா,பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசார, நந்தினி, கிருஷ்ண ஜீவனி, விஸ்வ பூஜிதா. துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட். துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.சங்காபிஷேகத்தில் துளசி சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மகா ஞானியாகும் பாக்கியமும்,முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது

சங்காபிஷேகம். கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும்,லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள்.இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள்.

ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க

வேண்டியதாயிற்று. அதே போல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள்.மாதவியின்

மகள் தான் துளசி. சங்கசூடனும்,துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும்,சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும்,துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள்.

இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும்,லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

கிருஷ்ண பகவான் பாமா,ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். 🌱இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும்,ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ,விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும்,கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும்,தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கி கொள்ள நினைத்தாள்.

இதற்காக கண்ணனை,துலாபார தராசு தட்டின் ஒரு புறமும்,மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள்.ஆனால் தராசு சமமாகவில்லை. 🌱அப்போது அங்கு வந்த ருக்மணி,கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி,கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன்,நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் நான்,எனது என்ற அகந்தையை ஒழித்து,உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம்,என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து வணங்கினாள் பாமா.

துளசியின் ஒரு இதழ்,பொன் பொருள் போன்றவற்றைவிட உயர்ந்தது என்பதை நிருபித்தார் கிருஷ்ணனர். எனவே,தான் இவ்வளவு சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *