விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்க சூரி மறுப்பு?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது..
இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உள்பட ஒரு சில நடிகர்களை ஜேசன் சஞ்சய் அணுகி கதை சொன்னதாகவும், ஆனால் இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ள சூரியிடம் ஜேசன் சஞ்சய் இந்த படத்தின் கதையை சொல்லி இருக்கிறார்.
கதையை ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட்ட சூரி, ‘இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை, என்னை போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்று அவர் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிக்கும் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
