கல்வி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்- 53 ஆசிரியர்கள் கைது
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு முடிவின்படி அரசாணை 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முடியும்வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் ஆசிரியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,’
கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பணிகள் பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈடுபட்ட 21 ஆசிரியைகள் உட்பட 53 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்,
/