கோவில்பட்டி காந்தாரி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி செல்லப்பாண்டி நகரில் ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் 5 வது.வருடாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது
அதிகாலையில் மங்கல இசையுடன். விழா தொடங்கியது. தொடர்ந்து. திருமுறை பாராயணம்.சங்கல்பம். விநாயகர் பூஜை புன்னியாகவாசனம். கும்ப பூஜை .கணபதி ஹோமம். லட்சுமி ஹோமம் .நவக்கிர ஹோமம். அஸ்திர ஹோமம்.ஸ்ரீ வராகஹினி மூல மந்திர ஹோமம் மகா பூர்ணகுதி. ஹோமம் .நடைபெற்றது
அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா புவன காந்தாரி அம்மனுக்கு வருடாபிஷேகம் நடைபெற்றது
புவன காந்தாரி அம்மன் பீடத்திற்கு மேல் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதே சமயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்.சன்னதியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது
சிவகாசியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் .விக்னேஸ்வர சிவம் , பூமணி ஆகியோர் கணபதி ஹோமத்துடன் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். அர்ச்சகர் பாலு பூஜைகள் நடத்தினார்.
சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது